பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் அருட்சகோதரன் றொபேட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி உப அதிபர் அருட்தந்தை றெனால்ட் செறில்னஸ் அவர்களின் தலைமையில் பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் காலை திருப்பலியும் தொடர்ந்து மாலை மறைப்பாடசாலை மண்டபத்தில் மாணவர்களுக்கான விளையாட்டுக்களும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் 60ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றினர்.

By admin