புத்தளம் மாவட்ட ரெனிஸ் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான தேசிய கூல் ரெனிஸ் போட்டி ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை புத்தளத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் ஆருஸன் ஒன்பது வயதிற்குட்பட்ட ழுசயபெந டீயடட பிரிவு ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன் இரட்டையர் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
அத்துடன் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 12, 14, 16 மற்றும் 20 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான சிநேகபூர்வ காற்பந்தாட்டப் போட்டிகள் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில்நுட்ப நிலைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.
இப்போட்டிகளின் 12 வயதுப் பிரிவில் 3:0 என்ற கோல் கணக்கிலும், 14 வயதுப் பிரிவில் 3:0 என்ற கோல் கணக்கிலும், 16 வயதுப் பிரிவில் 4:0 என்ற கோல் கணக்கிலும், 20 வயதுப் பிரிவில் 5:0 என்ற கோல் கணக்கிலும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் யாழ்ப்பாணக் கல்லூரி அணியினரைத் வெற்றிபெற்றனர்.
இப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் ஸ்ரெயின் 12 வயதுப் பிரிவில் சிறந்த ஆட்ட நாயகனாகவும், செல்வன் ஸ்மித் 14 வயதுப் பிரிவில் சிறந்த வீரராகவும், செல்வன் அன்றிஜன் 16 வயதுப் பிரிவில் சிறந்த வீரராகவும், செல்வன் மரினோ கீர்த்திகன் 20 வயதுப் பிரிவில் சிறந்த வீரராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

