ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை நினைவாக யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆயர் தியோகுப்பிள்ளை அறக்கொடை நினைவு பேருரை ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய தலைவர் அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வியாளரும் தொழில்நுட்ப வல்லுநருமான அருட்தந்தை அசோக் அமலதாஸ் அவர்கள் கலந்து “செயற்கை நுண்ணறிவும் மனிதமும்” என்னும் தலைப்பில் பேருரையாற்றினார்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித், குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட், குருக்கள், துறவிகள், குருமட மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்களென நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.

By admin