உலக அமைதிக்காகவும், போர் பிரதேசங்களில் வாழும் சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்காகவும் திருத்தந்தையின் உலகளாவிய அழைப்பின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் “ஒரு மில்லியன் பிள்ளைகள் செபமாலை செபிக்கும்” நிகழ்வு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாண மறைக்கோட்டத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ்ப்பாணம் புனித அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை மறையுண்மைகள் காட்சிப்படுத்தப்பட்டு மறைக்கோட்ட பங்குகளிலிருந்து வருகை தந்த சிறுவர்களால் செபமாலை செபிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆலய வளாகத்தில் செபமாலை பேரணி இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் மறைக்கோட்ட பங்குகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறார்கள் பங்குபற்றினர்.

