கிளிநொச்சி உதயநகர் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

இவ்வாலய கட்டுமானப்பணிகளுக்கான 75 இலட்சம் ரூபாய் நிதியை தியாகி அறக்கொடை நிறுவுனர் திரு. வாமதேவா தியாகேந்திரன் அவர்கள் வழங்கியிருந்தார்.

By admin