யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர்தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் றக்கா வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலாமுற்றத்தில் நடைபெற்றது.
காலாமுற்ற பொறுப்பாளர் திருமதி ஜெயப்பிரபா ஜஸ்ரின் ஜெலூட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்ற பிரதி இயக்குநர் திரு. ஜோண்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நடனங்கள், தமிழ், சிங்கள பாடல்கள், பேச்சு, ஆங்கில குறு நாடகம் என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக கூண்டுக்கிளி சிறுவர் நாடகமும் சிறார்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் சமூக செயற்பாட்டுமைய பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் திரு. சுகிர்தராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ்ப்பாண மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு மாவட்ட இணைப்பாளர் திரு. இராமலிங்கம் சதாசிவம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

