யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி 04ஆம் வருட இறையியல் மாணவர்கள் ஊடகத்துறை சார்ந்த கள அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெற்றது.

ஊடக மைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் ரகுராம், வலம்புரி பத்திரிகை ஆசிரியர் திரு. விஜயசுந்தரம், ஈழத்து குறும்பட இயக்குநர் திரு. மதிசுதா, பாதுகாவலன் பத்திரிகை ஆசிரியர் அருட்தந்தை எயின்சிலி றொசான், GJ Photography உரிமையாளர் செல்வன் யூட் ஜெனிஸ்ரன், உதயன் பத்திரிக்கை செய்தி ஆசிரியர் திரு. பிரகாஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து பத்திரிகை துறை, புலனாய்வு பத்திரிகையியல், புகைப்படத்துறை, குறும்படம், அச்சு ஊடகம், போன்ற தளங்களில் அருட்சகோதரர்களை நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் ஒளி, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, சமூகவலைத்தள நிகழ்ச்சி தயாரிப்பு, செய்தி வாசிப்பு, ஊடக தொழில்நுட்ப செயற்பாடுகள், குறும்பட தயாரிப்பு, செய்தி உருவாக்கம், செய்தி வாசிப்பு போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

By admin