நெடுந்தீவுப் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை திருப்பலியும் தொடர்ந்து மாலை நெடுந்தீவு றோ.க மகளிர் கல்லூரி மைதானத்தில் மாணவர்களுக்கான விளையாட்டுக்களும் நடைபெற்றன.

விளையாட்டு நிகழ்வில் மாணவர்களின் அணிவகுப்பு, தண்ணீர் நிரப்புதல், பலூன் விளையாட்டுகள், பிஸ்கட் சாப்பிடுதல், மோதிரம் மாற்றுதல், கயிறு இழுத்தல், தடை தாண்டுதல், ஆசிரியர்களுக்கான விளையாட்டுகள், வினோத உடை போட்டி என்பவற்றுடன் பரிசளிப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயரின் செயலாளர் அருட்தந்தை கமல்ராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் நெடுந்தீவு மகா வித்தியாலய ஆசிரியர் அருட்தந்தை சோபன் ரூபஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரி ஆசிரியர் திரு. பிலிக்ஸ் ஜேகப் மற்றும் நெடுந்தீவு கோட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி வசந்தா சகாயராணி செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

 

By admin