சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை எட்வின் வசந்தராசா அவர்களின் தலைமையில் திருப்பலியும் திருப்பலி நிறைவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பை நிறைவுசெய்த ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் தொடர்ந்து ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மடு வலய கல்வி பணிப்பாளர் திருமதி அதிசயமலர் வொலன்ரீனா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்புரையாற்றியதுடன் ஆசிரியர்களின் அனுபவ பகிர்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 30 கத்தோலிக்க ஆசிரியர்கள் பங்குபற்றினர்.

By admin