யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் சில்லாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறப்பு ஆற்றுப்படுத்தல் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 09, 10, 11ஆம் திகதிகளில் நடைபெற்றது.

சில்லாலை பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் சங்கானை புனித சலேசியார் மற்றும் சில்லாலை புனித யாகப்பர் ஆலயங்களில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இல்ல தரிசிப்புக்கள், உளவியல் ஆற்றுப்படுத்தல், சிறப்பு வழிபாடுகள், திருப்பலி என்பன நடைபெற்றன.

இவ்ஆற்றுப்படுத்தல் நிகழ்வை திருக்குடும்ப கன்னியர் சபை மாகாண முதல்வி அருட்சகோதரி ஜொய்லின் றாஜி ஸ்ரான்லி அவர்களின் வழிநடத்தலில் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகள் நெறிப்படுத்தினர்.

இறுதிநாளன்று மாலை சிறப்பு திருப்பலியும், திருப்பலி நிறையில் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றன.

 

By admin