மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கலைநிகழ்வுகளும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் நடைபெற்றன.
அத்துடன் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அவர்களின் வழிகாட்டலில் “வாழ்நாள் முழுவதும் எழுத்து என் நண்பன்” என்னும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் வாசிப்பு திறனை வளர்க்கும் நடமாடும் நூலகம், விளையாட்டுக்கள், கருத்துரைகள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பாடாசாலை மாணவர்கள் மற்றும் மானிப்பாய் அருணோதய முன்பள்ளி சிறார்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
மேலும் பாடசாலையில் தரம் 01, 02ல் கல்விகற்கும் மாணவர்களுக்கான சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் 61 மாணவர்கள் சின்னங்களை பெற்றுக்கொண்டனர்.

