புனரமைக்கப்பட்ட மூளாய் புனித செபமாலை அன்னை ஆலய திறப்புவிழாவும் திருவிழாவும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் கலந்து ஆலயத்தை ஆசீர்வதித்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
நற்கருணைவிழா திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

