யாழ். திருமறைக் கலாமன்ற மூத்த அங்கத்தவரும், எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளரும், ஜெயந்த் சென்ரர் கணினி நிலைய உரிமையாளரும், இலக்கியவாதியுமான கலையார்வன் குருசுமுத்து இராயப்பு அவர்கள் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இவர் இலக்கியம், அறிவியல், ஆவணப்படுத்தல் என இருபதுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளதுடன் யாழ். திருமறைக்கலாமன்ற ‘கலைமுகம்’ கலை இலக்கிய சமூக இதழ் மற்றும் மன்றத்தின் ஏனைய வெளியீடுகளின் கணினி சார்ந்த தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இவர் பல நூல்களுக்கு தேசிய இலக்கிய விருதுகளையும், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.
