பெல்ஜியம் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் பத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அண்ட்வெர்பன் நகரில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு சிறப்புத் திருப்பலியும் தொடர்ந்து ஒன்றுகூடலும் இடம்பெறவுள்ளதுடன் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு பெல்ஜியம் வாழ் புலம்பெயர் தமிழ் கத்தோலிக்கர்களுக்கு பணியக இயக்குநர் அருட்தந்தை ஆபிரகாம் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
