மன்னார் மறைமாவட்டம் உதயமானதன் 50ஆவது ஆண்டு ஜூபிலி 2031ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், ஐந்தாண்டு ஆயத்த தியானத்தின் புதுப்பித்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் அங்கமான மன்னார் மறைமாவட்ட அன்பியப் ஊக்குவிப்பாளர்கள், மறையாசிரியர்கள், கத்தோலிக்க ஆசிரியர்கள், ஆலய பொருளாளர், செயலாளர்கள், தன்னார்வ பணியாளர்கள் மற்றும் இளையோருக்கான புதுப்பித்தல் தியானங்கள் அண்மையில் இடம்பெற்றன.

மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானங்களை இந்தியா சியோன் ஆன்மீக பணித்தள பணியாளர் அருட்தந்தை இருதயராஜ் அவர்கள் நெறிப்படுத்தினார்.

By admin