மணியந்தோட்டம் பங்கிற்குட்பட்ட கிழக்கு அரியாலை வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வரதன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

அத்துடன் திருத்தந்தையின் வேண்டுகோளின் படி ஒரு மில்லியன் சிறுவர்கள் திருச்செபமாலை சொல்ல வேண்டும் என்ற கருத்துக்கு அமைவாக மணியந்தோட்டம் வசந்தபுரம் புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த சிறப்பு செபமாலை ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வரதன் குருஸ் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்சிறப்பு செபமாலையில் சிறார்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

By admin