உடுவில் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செம்டெம்பர் மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி உப அதிபர் அருட்தந்தை றெனால்ட் செறில்னஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

