கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

