யாழ். புனித திரேசம்மாள் ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செம்டெம்பர் மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா அன்று மாலை புனிதையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

