யாழ். மறைமாவட்ட பொதுநிலை பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ்கன் திருவிழா ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
01ஆம் திகதி வியாழக்கிழமை வழிபாடுகள் ஆரம்பமாகி முதலாம் இரண்டாம் நாள் வழிபாடுகள் யாழ். புனித மரியன்னை பேராலயத்திலும் மூன்றாம் நாள் நிகழ்வுகள் கொழும்புத்துறை பிரான்சிஸ்கன் சபை ஆவே மரியா துறவிகள் மடத்திலும் இடம்பெற்றன.
இறுதி நாளன்று திருவிழா திருப்பலி யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றதுடன் திருப்பலியை அருட்தந்தை மத்தியு அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

