யாழ். மறைமாவட்ட குருவும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர்குருத்துவக் கல்லூரி விரிவுரையாளருமான அருட்தந்தை ரவிராஜ் அவர்களின் “Ethical Argumentations of English Speaking Bio-ethical Thoughts of In Vitro Fertilization” நூல் வெளியீடு ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அகவொளி குடும்ப நல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர்குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ஜேம்ஸ்நாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து நூலை வெளியிட்டு வைக்க, நூலுக்கான ஆய்வுரையை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் வழங்கினார்.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் பிரதம விருந்தினராகவும், கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் இறையியல் நிறுவக இயக்குனர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் மற்றும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி அதிபர் அருட்தந்தை பெற்றூஸ் தயாபரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், குருமட மாணவர்கள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
செயற்கை கருத்தரித்தல் பற்றிய கிறிஸ்தவ அறநெறிப் பார்வை தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது.

