தீவகம், அனலைதீவு புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிளறேசியன் சபை அருட்தந்தை இதயராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 02 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.
அத்துடன் அனலைதீவு புனித வேளாங்கன்னி அன்னை ஆலய மணிக்கோபுர திறப்புவிழா புரட்டாதி மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
புதிதாக அமைக்கப்பட்ட மணிக்கோபுரத்தை மாங்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

