மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜினோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அருட்தந்தை இஞ்ஞாசி ஜோசப் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் திருச்சிலுவை பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

