யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான Badminton போட்டித்தொடர் ஆனி மாதம் 19, 20, 21ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கு, Jaffna Bowling Centre மற்றும் கொக்குவில் இந்துக்கல்லூரி உள்ளக விளையாட்டு திடலில் நடைபெற்றது.
இத்தொடரின் பரிசளிப்பு மற்றும் நிறைவு நிகழ்வு ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

