தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நான்காம் குழுவினருக்கான தியானம் பங்குனி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
திருத்தல பரிகாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில் இளவாலை மறைக்கோட்டம் மற்றும் நாவாந்துறை பங்கை சேர்ந்த இறைமக்களுக்காக நடைபெற்ற இத்தியானத்தில் திருச்சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பன இடம்பெற்றன.
இத்தியானத்தில் இறைமக்கள் பலரும் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

