அமலமரித்தியாகிகள் சபை இளையோர் திறன் விருத்தி மையத்தில் தையல், ஆரி வேர்க், கேக் ஜசிங் கற்கைநெறிகளை நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 21ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

திறன்விருத்தி மைய இயக்குந்ர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றமேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகளின் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக், HAVONOS நிறுவன தலைவர் Ms. Sieni, நிர்வாக உறுப்பினர் Ms. Alinda ஆகியோர் கலந்து கற்கை நெறியை நிறைவுசெய்த 102 மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.

இப்பயிற்சி நெறிகளுக்கான நிதி அனுசரணையை HAVONOS மற்றும் PMF நிறுவனங்கள் வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin