Month: January 2025

இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி

இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி 10ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குநாகல் மறைமாவட்டத்தின் பன்னல பிரதேசத்தில் அமைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டு மையத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. சம்மேளன…

மன்னார் மறைமாவட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் தலைமையில் கடந்த 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை சுரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

குருத்துவ மற்றும் திருநிலைப்படுத்தல் திருச்சடங்குகள்

குருத்துவ மற்றும் திருநிலைப்படுத்தல் திருச்சடங்குகள் மன்னார் மறைமாவட்டத்தில் கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் திவ்விய இரட்சகர் சபை திருத்தொண்டர்…

யாழ். மறைமாவட்ட ஆணைக்குழுக்களின் செயல்திட்டங்களை சமர்ப்பிக்கும் கூட்டம்

யாழ். மறைமாவட்டத்தில் இயங்கும் மறைமாவட்ட ஆணைக்குழுக்களின் இவ்வருடத்திற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்கும் கூட்டம் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…

ஆயருடனான சந்திப்பு

கனடா பாராளுமன்ற உறுப்பினரும் முடிக்குரியோர் மற்றும் பூர்வகுடியினர் உறவுகளுக்கான அமைச்சருமான திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை…