?????????????????????????????????????????????????????????

டிச.30. மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கான வரவேற்பும் அவருடைய பணிப்பொறுப்பு ஏற்பு நிகழ்வும் இன்று  (சனிக்கிழமை 30ஆம் திகதி) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக தள்ளாடி சந்தியிலிருந்து புதிய ஆயர்  வரவேற்கப்பட்டு  மன்னார் புனித செபஸ்தியார்  பேராலயத்திற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி, கொழும்பு  பேராயர், ஏனைய மறைமாவட்ட ஆயர்கள், குருக்கள் மற்றும் ஆயிரகணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டார்கள்.

?????????????????????????????????????????????????????????

26001033_356709524798607_380447305358463866_n

By admin