மணற்காடு பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவுள்ள மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த கண்காட்சி புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியர் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களால் தூய ஆவியார், உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பற்றிய அறிமுகமும் தூய ஆவியார் பற்றிய இறைவார்த்தைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
இக்கண்காட்சியில் 85 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

