யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் மேரி வினிபிறீடா சந்திரசேகர் அவர்கள் எழுதிய ‘ஞானப்பள்ளு : இலக்கியம் – இறையியல் – வரலாறு’ மற்றும் ‘திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் சிற்ப கட்டடக்கலை’ ஆகிய நூல்களின் அறிமுக விழா கடந்த 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழுவும் யாழ்.பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையும் இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில் ஞானப்பள்ளு நூலிற்கான ஆய்வுரையை யாழ். கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திரு. யோன்சன் ராஜ்குமார் அவர்களும் திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் சிற்ப கட்டடக்கலை நூலிற்கான ஆய்வுரையை கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி பப்சி மரியதாசன் அவர்களும் வழங்கியிருந்தனர்.
தென்னிந்திய திருச்சபை ஓய்வு நிலை பேராயர் பேரருட்தந்தை ஜெபநேசன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராசா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர் சிவலிங்கராஜா, அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அருட்தந்தையர்கள், யாழ். பல்லைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை மாணவர்கள், பொதுநிலையினரென பலரும் கலந்துகொண்டனர்.