முல்லைத்தீவு மணல் அகழ்வு சம்பந்தமாக ஆயர் இல்ல அறிக்கை

ஆயர் இல்லம்
யாழ்ப்பாணம்
10-06-2021

முல்லைத்தீவு மணல் அகழ்வு சம்பந்தமாக ஆயர் இல்ல அறிக்கை

முல்லைத்தீவு உடுப்புக்குளம் உப்புமாவெளி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணிகளில் சட்டத்திற்கு புறம்பான வகையில் மணல் அகழ்வு நடக்கிறது என்ற செய்திகள் அண்மைக்காலமாக பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமான ஒரு தெளிவை ஏற்படுத்த விரும்புகிறோம்.

Continue reading முல்லைத்தீவு மணல் அகழ்வு சம்பந்தமாக ஆயர் இல்ல அறிக்கை

எழுதுமட்டுவாள் “நுங்குவில் தோட்டத்தில்” விடுமுறை இல்லம்.

எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு செந்தமான “நுங்குவில் தோட்டத்தில்” அமைக்கப்பட்ட ‘விடுமுறை இல்லம்’ யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. ஆயர் அவர்கள் தனது பெயர்கொண்ட புனிதரின் திருநாளில் இவ்வில்லத்தை திறந்துவைத்தார். இந்நாளில் நிகழ்வை சிறப்பிக்குமுகமாக மரம் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

Continue reading எழுதுமட்டுவாள் “நுங்குவில் தோட்டத்தில்” விடுமுறை இல்லம்.

‘கொவிட் – 19’தடுப்பூசிபெற்றுக் கொண்ட அருட்பணியாளர்

02.06.2021 புதன்கிழமை இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ‘கொவிட் – 19’ தடுப்பூசி முகாமில் யாழ். நகரில் பணியாற்றிவரும் சில அருட்பணியாளர்களும் தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்டார்கள்.

Continue reading ‘கொவிட் – 19’தடுப்பூசிபெற்றுக் கொண்ட அருட்பணியாளர்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் நினைவேந்தலுக்கு வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் நினைவேந்தலுக்கு வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு அழைப்பு விடுத்துள்ளது

யாழ் மறைமாவட்ட திருஅவைக்கு மூன்று புதிய அருட்பணியாளர்கள்.

24.04.2021 சனிக்கிழமை இன்று காலை 9.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குருத்துவ திருநிலைப்படுத்தல் திருப்பலியில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த மூன்று தியாக்கோன்கள் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள். அருட்பணியாளர்களான தயதீபன், நிலான் யூலியஸ், யூட் கெமில்டன் ஆகியோரே புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டவர்களாவார்.

Continue reading யாழ் மறைமாவட்ட திருஅவைக்கு மூன்று புதிய அருட்பணியாளர்கள்.

யாழ். மறைமாவட்ட குருவும் திருமறைக் கலாமன்றம் ஸ்தாபகரும் இயக்குநருமான அருட்கலாநிதி நீ. மரியசோவியர் அவர்கள்இறையாடி சேர்ந்தார்

யாழ். மறைமாவட்ட குருவும் திருமறைக் கலாமன்றம் ஸ்தாபகரும் இயக்குநருமான அருட்கலாநிதி நீ. மரியசோவியர் அவர்கள் 01.04.2021 வியாழக்கிழமை இன்று மாலை இறைபதம் அடைந்து விட்டார். அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.
கலையூடாக இறைபணியாற்றி வரலாற்றில் பல சாதனைகளை புரிந்து தமிழுக்கும் மறைக்கும் பெரும்பணியாற்றிய இவரின் இழப்பு பேரிழப்பாகும்.

Continue reading யாழ். மறைமாவட்ட குருவும் திருமறைக் கலாமன்றம் ஸ்தாபகரும் இயக்குநருமான அருட்கலாநிதி நீ. மரியசோவியர் அவர்கள்இறையாடி சேர்ந்தார்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை இறையாடி சேர்ந்தார்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை 01. 04 .2021 வியாழக்கிழமை இன்று இறைபதம் அடைந்து விட்டார். பல நெருக்கடியான காலகட்டத்தில் நல்லாயனாக பணியாற்றி ஈழத்தமிழர் வரலாற்றில் என்றும் பேசப்படும் ஆயரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடி அவரை அஞ்சலிப்போம். .

Continue reading மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை இறையாடி சேர்ந்தார்