இறந்த விசுவாசிகளின் நினைவாக மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் வழிநடத்தலில் கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இம்முகாமில் 30 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

