யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஓர் அங்கமான கத்தோலிக்க வைத்தியர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களின் தலைமையில் White Mass திருப்பலியும் தொடர்ந்து பேராலய மண்டபத்தில் ஒன்றுகூடலும் நடைபெற்றன.

இவ் ஒன்றுகூடலில் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும் கடந்த ஆண்டு அறிக்கைகள் சமர்ப்பிப்பும் புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றன.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், வைத்தியர்கள், வைத்தியர்களின் குடும்ப உறுப்பினர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin