2097708_Articoloபிப்.02,2018. மதத்தின் பெயரால் ஊக்குவிக்கப்படும் மற்றும், நடத்தப்படும் வன்முறை, மதத்தையே மதிப்பிழக்கச் செய்வதாகும் என்றும், இத்தகைய வன்முறைக்கு அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார்.

மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறை குறித்த பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொள்ளும் ஐம்பது பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

உலகில் எல்லாரும், குறிப்பாக, கடவுள் எப்போதும் நல்லவர், அன்பானவர், இரக்கமுள்ளவர், அவரில், காழ்ப்புணர்வு, பழிவாங்குதல், வெறுப்பு ஆகியவற்றுக்கு இடமே இல்லை என்பதை அறிந்திருக்கும், உண்மையான மத நம்பிக்கையாளர்கள், மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று, கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருவர், தன் பாவங்கள் மற்றும், குற்றங்களையும், தான் செய்யும் கொலை, பெருமெண்ணிக்கைக் கொலைகள், சுரண்டல், தனியாள்களையும், முழு சமுதாயத்தையும் ஒடுக்குதல், சித்ரவதைப்படுத்துதல் ஆகியவற்றையும் நியாயப்படுத்த, கடவுளின் பெயரைப் பயன்படுத்துவது, மிகப்பெரிய தெய்வநிந்தனைகளில் ஒன்றாகும் என்பதை, சமய உணர்வு கொண்டவர்கள் அறிந்திருக்கின்றார்கள் என்றும், திருத்தந்தை கூறினார். தவறான பாதையில் வழிநடத்தும் மத உணர்வுகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு, அரசியல் அதிகாரிகளும், மதத் தலைவர்களும், கல்வித்துறையில் பணியாற்றுகின்றவர்களும் முயற்சிக்குமாறு கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறைச் செயல்களுக்குப் பதிலளிப்பது எப்படி என்பது குறித்து, அரசியல் அதிகாரிகளும், மதத் தலைவர்களும் கலந்துரையாடுவதைப்  பாராட்டி, ஊக்குவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

By admin

You missed

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் வளவாளராக பணியாற்றும் ஈழத்து இயக்குனர் திரு. மதிசுதா அவர்களின் சகோதரன் திரு. சுரேந்திரராஜா சாந்தன் அவர்கள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு 33 வருடங்கள் சிறைததண்டனை அனுபவித்து தொடர்ந்து அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நோயுற்று 28ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது குடும்பத்தினரின் முயற்சியால் இவர் இந்தியாவிலிருந்து 28ஆம் திகதி மாலை நாடு திரும்ப இருந்த நிலையில் அன்றைய தினம் அதிகாலை மாரடைப்பால் மரணத்தை தழுவிக்கொண்டார். இவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் அமைதிபெற மன்றாடுவோம்.