இரணைப்பாலை பங்கு மறைக்கல்வி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் 9ஆம் திகதி சனிக்கிழமை இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய வளாகத்தில் யாழ். மறைமாவட்ட மறைக்கலவி இயக்குனர் அருட்திரு யேம்ஸ் அவர்களின் வாழிகாட்டலில் நடைபெற்றது.
காலைத் திருப்பலியும் தெடர்ந்து மறைக்கல்வி மாணவர்கள் ஆசிரியர்களுக்கான குழுச் செயற்பாடுகளும் இங்கு இடம்பெற்றன. பங்குத்தந்தை அருட்திரு மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200வரையான மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டார்கள்.