பருத்தித்துறை புனித தோமையார் ஆலய திருவிழா

பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. யூன் மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி புதன்கிழமை…

மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் குணமாக்கல் வழிபாடு

மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் உயிர்த்த ஆண்டவர் சமூகம் முன்னெடுத்த குணமாக்கல் வழிபாடு பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு…

பதுளை புனித மரியாள் பேராலயத்தில் புதுப்பித்தலின் தூய ஆவியார் ஆராதனை

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தின் ஏற்பாட்டில் பதுளை புனித மரியாள் பேராலயத்தில் புதுப்பித்தலின் தூய ஆவியார் ஆராதனை நடைபெற்றது. 05ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஆரம்பமாகிய இவ் ஆராதனையில் இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, அபிசேக வழிபாடு என்பன இடம்பெற்றதுடன்…

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல திரு இருதயநாதர் சிற்றாலய திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கிற்குட்பட்ட திரு இருதயநாதர் சிற்றாலய திருவிழா யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலியில் இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

நவாலி புனித பேதுரு, பவுல் ஆலய வருடாந்த திருவிழா

நவாலி புனித பேதுரு, பவுல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…