தேசியமட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தரம் 04 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களுக்கு மறைமாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட தேசியமட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தில் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின்…

மெலிஞ்சிமுனை பங்கில் விழிப்புணர்வு வீதி நாடகம்

பெண்கள் அடக்குமுறை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் வல்லமை மற்றும் தோழமை அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த விழிப்புணர்வு வீதி நாடகம் யூலை மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மெலிஞ்சிமுனை பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய கலை மாலை நிகழ்வு

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய திருவிழாவை சிறப்பித்து ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கலை மாலை நிகழ்வு யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், பாடல், நடனம், விவாதம்,…

“தாய்லாந்து திறந்த கராத்தே சுற்றுப் போட்டி”

“தாய்லாந்து திறந்த கராத்தே சுற்றுப் போட்டி” அண்மையில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்றது. இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி குழுக்காட்டா பிரிவு போட்டியில் பங்குபற்றிய குழுவில், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் ஜோண் றஜீவ் பியன் பெனோ அவர்கள் கலந்துகொண்டதுடன்…

பியர் பியன்வெனு நோஆய் திருநாள்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை நிறுவுனர் பியர் பியன்வெனு நோஆய் அவர்களின் திருநாள் யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கும்ப கன்னியர் மட யாழ். மாகாண இல்லத்தில் நடைபெற்றது. மாகாண முதல்வி அருட்சகோதரி தியோபின் குருஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற…