Pope Francis delivers an extraordinary blessing “To the City and to the World” on Friday to pray for an end to the Covid-19 coronavirus pandemic. In his meditation, the Pope reflects on Jesus’ words to His disciples: “Why are you afraid? Have you no faith?” Full text included.
Continue reading Pope’s special Urbi et Orbi blessing: ‘God turns everything to our good’கோவிட்-19 நெருக்கடியில் பரிபூரண பலன், மாபெரும் கொடை
நோயில்பூசுதலை, ஒப்புரவு அருளடையாளத்தை அல்லது திருநற்கருணையை வாங்க இயலாத நோயாளிகள், தங்களை இறை இரக்கத்திடம் அர்ப்பணிக்க வேண்டும்

இலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கு புனித மரியன்னை பேராலயத்தில் அஞ்சலி
இலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 23.04.2019 செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் தலைமையில் நடைபெற்றது. Continue reading இலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கு புனித மரியன்னை பேராலயத்தில் அஞ்சலி
உயிர்ப்பு ஞாயிறன்று, இலங்கையில் நிகழ்ந்த தாக்குதல்கள் குறித்து திருத்தந்தையின் அனுதாபம் (Vatican Media)
இலங்கையில், ஏப்ரல் 21, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான, இஞ்ஞாயிறு காலையில், சில ஆலயங்கள் மற்றும் ஏனைய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் பற்றி, ‘ஊர்பி எத் ஓர்பி’ ஆசீருக்குப் பின்னர், மிகுந்த கவலை மற்றும் வேதனையோடு பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ். Continue reading உயிர்ப்பு ஞாயிறன்று, இலங்கையில் நிகழ்ந்த தாக்குதல்கள் குறித்து திருத்தந்தையின் அனுதாபம் (Vatican Media)
“அன்பில் மலர்ந்த அமர காவியம்” திருப்பாடுகளின் காட்சி
21.04.2019. யாழ். திருமறைக் கலாமன்றம் தயாரித்தளித்த ‘அன்பில் மலர்ந்த அமரகாவியம்’ திருப்பாடுகளின் காட்சி இம்மாதம் 11,12,13,14 ஆம் திகதிகளில் பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைகாலமான்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. தவக்கால ஆற்றுகையாகிய இத்திருப்பாடுகளின் கட்யாசியில் யழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, புத்தளம் மாவடங்களை சேர்ந்த பண்ணிரண்டயிரத்திற்கும் அதிகமான மக்கள் இணைந்துகொண்டானர். Continue reading “அன்பில் மலர்ந்த அமர காவியம்” திருப்பாடுகளின் காட்சி
புனித வெள்ளி சிலுவைப்பாதை – திருத்தந்தையின் இறுதி செபம்
இன்றைய உலகில் துன்புறும் அனைவரும் சுமந்து செல்லும் சிலுவைகளில் இயேசுவின் சிலுவையைக் காணும் வரத்திற்காக செபிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சியின் இறுதியில் கூறினார்.
உரோம் நகரின் கொலோசெயம் திடலில், வெள்ளி இரவு, 9.15 மணிக்குத் துவங்கிய சிலுவைப்பாதையை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை, அந்த பக்தி முயற்சியின் இறுதியில் கூறிய செபத்தின் தமிழ் மொழியாக்கம் இதோ:
ஆண்டவராகிய இயேசுவே, உலகின் அனைத்து சிலுவைகளிலும் உமது சிலுவையைக் காண எங்களுக்கு உதவியருளும்: Continue reading புனித வெள்ளி சிலுவைப்பாதை – திருத்தந்தையின் இறுதி செபம்
மறையாசிரியர்களுக்கான மூன்று மாதகால வதிவிடப் பயிற்சி – 2019
யாழ்ப்பாண மறைமாவட்ட பங்குகளில் மறைக்கல்வி கற்பிக்கும் மறையாசிரியர்களுக்கான மூன்று மாதகால வதிவிடப் பயிற்சி தை மாதத்திலிருந்து சித்திரை மாதம் வரையான காலப்பகுதியில் யாழ். மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது. பல்வேறு பங்குகளிலிருந்தும் 21 மறையாசிரியர்கள் இப்பயிற்சியில் பங்குபற்றினார்கள். இப்பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வாக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 13.04.2019 சனிக்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலையத்தில் இயக்குனர் அருட்திரு பெனற் அடிகளார் தலைமையில் இடம் பெற்றது. Continue reading மறையாசிரியர்களுக்கான மூன்று மாதகால வதிவிடப் பயிற்சி – 2019
புதுக்குடியிருப்பில் ‘பலிக்களம்’ திருப்பாடுகளின் காட்சி.
முல்லைத்தீவு மறைக்கோட்டம் யாழ்.திருமறைகாலமான்றத்துடன் இணைந்து வழங்கிய ‘பலிக்களம்’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு ஜோர்ச் அடிகளாரின் தலைமையில் மறைகோட்ட குருக்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்வாற்றுகையில் 160 ற்கும் அதிகமான அப்பிரதேச வாழ் கலைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். முல்லைத்தீவு மறைகோட்ட பங்குகளிலிருந்து 4000 ற்கும் அதிகமான மக்கள் பக்தி உணர்வோடு இதில் இணைந்து கொண்டனர். Continue reading புதுக்குடியிருப்பில் ‘பலிக்களம்’ திருப்பாடுகளின் காட்சி.
பொதுநிலை நற்கருணைப் பணியாளர்களுக்கான ஆன்மீக வலுப்படுத்தல்
பொதுநிலை நற்கருணைப் பணியாளர்களுக்கான ஆன்மீக வலுப்படுத்தும் நிகழ்வு 07.04.2019 ஞாயிற்றுக் கிழமை யாழ். மறைக் கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு மவுலிஸ் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மறை மாவட்டத்தில் பல பங்குகளில் பணியாற்றும் பொதுநிலை நற்கருணைப் பணியாளர்கள் கலந்து பயனடைந்தர்கள் . Continue reading பொதுநிலை நற்கருணைப் பணியாளர்களுக்கான ஆன்மீக வலுப்படுத்தல்
மறையாசிரியர்களுக்கான தவக்காலத் தியானம் -2019
யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை ஆகிய மறைக்கோட்டங்களைச் சேர்ந்த மறையாசிரியர்களுக்கும், கத்தோலிக்க ஆசிரியர்களுக்குமான தவக்கால தியானம் 16.03.2019 சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் 12.30 மணிவரை யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில், யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்திரு பெனற் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. Continue reading மறையாசிரியர்களுக்கான தவக்காலத் தியானம் -2019