ஆசிய ஆயர் பேரவையின் ஏற்பாட்டில் “பாலங்களை அமைப்போம் பாலங்களாக வாழ்வோம்” என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட மாநாடு இம் மாதம் 9ஆம் திகதி முதல் 14 ஆம் தேதி வரை நேபாளம் காத்மண்டு நகரில் நடைபெற்றது.
இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் திரு அவையைச் சேர்ந்த பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலையினர் பங்குபற்றிய இம்மாநாட்டில் ஆசிய ஆயர் பேரவையின் செயற்பாடுகள்,மதங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வழிமுறைகள், பெண் சமத்துவத்தின் அவசியம் போன்றவை தொடர்பான உரைகள் வழங்கப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அத்துடன் இம்மாநட்டில் கலந்து கொண்ட நாடுகளின் பிரதிநிதிகள் தத்தம் நாடுகளில் நிலவும் பிரிவினைகள், வேற்றுமைகள், வேறுபாடுகள், நெருக்கடிகள் பற்றி தங்களுடைய பிரச்சனைகளை முன்வைத்து அதற்குரிய தீர்வுகளை எவ்வாறு கண்டறியலாம் என்பதை பற்றி ஆராய்ந்தார்கள்.
இம்மாநாட்டில் இலங்கை திருஅவையில் இருந்து அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோபட் அந்த்ராடி அவர்களும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் குருநாகல் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை பியால் அவர்களும் மற்றும் அனுராதபுர மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை திலீப அவர்களும் கலந்துகொண்டனர்.

By admin