Yarl IT Hub நிறுவனத்தினால் வட மாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட Robotic & Innovation போட்டி யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் ஹேமோஸ் அவர்கள் Application of Science புத்தாக்க பிரிவில் முதலாம் இடத்தையும் செல்வன் றேனுஜன் அவர்கள் Mobile Application பிரிவில் விசேட விருதையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டிக்கான வலய ரீதியான தெரிவுப்போட்டி யூன் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றதுடன் அப்போட்டியில் பங்குபற்றி முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்கள் மாகாண போட்டிக்கு தெரிவாகியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 17 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியின் மூன்றாம் இடத்துக்கான போட்டி யூலை மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.
இப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணியை 27:26 புள்ளி என்ற கணக்கில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
மேலும் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கராத்தே சுற்றுப் போட்டியின் தனிக்காட்டா போட்டி யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அளவெட்டி அருணோதயா கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் ஜோண் றஜீவ் பியன் பெனோ இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.