வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய ஒளிவிழா ஒன்றுகூடல்
சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல துணைப்பங்கான வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா ஒன்றுகூடல் மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
“துயர் சுமந்த கரைகள்” இறுவட்டு வெளியீடு
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்த நினைவாக கட்டைக்காட்டு பங்கின் சென்மேரிஸ் நாடக மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட “துயர் சுமந்த கரைகள்” இறுவட்டு வெளியீடு மார்கழி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கட்டைக்காடு கப்பலேந்திமாதா சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய…
கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய வளாகத்தில் இயங்கும் பணியகங்களில் கடமையாற்றும் பணியாளர்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்வி நிலைய கேட்போர்…
“சோதி மனுவான காதை” தென்மோடி நாட்டுக்கூத்து
கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை சிறப்பித்து உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலய இறைமக்களால் மேடையேற்றப்பட்ட “சோதி மனுவான காதை” தென்மோடி நாட்டுக்கூத்து பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. தும்பளையூர்…
மறையாசிரிய நிர்வாக உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல்
மறைக்கோட்டங்களில் இயங்கும் மறையாசிரிய நிர்வாக உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு மார்கழி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறையாசிரியர்களுக்கான…
