செயற்திறன் வகுப்பறைத் திறப்புவிழா
யாழ்ப்பாணம் றக்கா வீதியில் அமைந்துள்ள புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட செயற்திறன் வகுப்பறைத் திறப்புவிழா 7ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரி அஞ்சலிக்கா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அருட்சகோதரி மரிய ஜெனிஸ்ரலா அந்தோனிதாஸ் அவர்களின் இறுதி அர்ப்பண நிகழ்வு
போர்தோவின் திருக்குடும்ப கன்னியர் துறவற சபையை சார்ந்த அருட்சகோதரி மரிய ஜெனிஸ்ரலா அந்தோனிதாஸ் அவர்களின் இறுதி அர்ப்பண நிகழ்வு 8ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின்…
சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
கனடா திருமறைக் கலா மன்றத்தின் நிதி அனுசரணையுடன் யாழ். திருமறைக் கலாமன்றத்தினூடாக மிகவும் தேவையுள்ள சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வாரங்களில் நடைபெற்றுள்ளன.
கரம்பன் பங்கில் முதல்நன்மை பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு
கரம்பன் பங்கில் முதல்நன்மை பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு 8ஆம் திகதி சனிக்கிழமை கரம்பன் புனித செபஸ்ரியார் ஆலய வளாகத்தில் பங்குத்தந்தை அருட்திரு தயாகரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
அளம்பில் புனித அந்தோனியார் ஆலய ஒளிவிழா
அளம்பில் புனித அந்தோனியார் ஆலய ஒளிவிழா கடந்த 29ஆம் திகதி அளம்பில் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
