JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 02.04.2022
https://youtu.be/jl95zfquuPU
கலைத்தூது அருட்கலாநிதி அமரர் நீ. மரிய சேவியர் அவர்களின் விண்ணக வாழ்வின் ஓராண்டு நினைவு
திருமறைக்கலாமன்றத்தின் நிறுவுனர் கலைத்தூது அருட்கலாநிதி அமரர் நீ. மரிய சேவியர் அவர்களின் விண்ணக வாழ்வின் ஓராண்டு நினைவின் பல்வேறு நிகழ்வுகள் 01ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை உள்நட்டிலும் வெளிநாட்டிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஆயர் பேரருட்திரு இராயப்பு யோசப் அவர்களின் விண்ணக வாழ்வின் ஓராண்டு நினைவு
ன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பேரருட்திரு இராயப்பு யோசப் அவர்களின் விண்ணக வாழ்வின் ஓராண்டு நினைவு நிகழ்வுகள் 02ஆம் திகதி மன்னார் மறைமாவட்டத்தில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெனான்டோ அவர்களின் தலைமையில் நினைவுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கண்டன அறிக்கை
இலங்கை பிரதமர் யாழ் குடாநாட்டிற்கு மார்ச் மாதம் 20ஆம் திகதி வந்தபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் குறிப்பாகப் பெண்கள் தமது எதிர்பைச் சாத்வீகமான முறையில் வெளிப்படுத்த முயன்ற போது பொலீசாரினால் தாக்கப்பட்டமையும் அநாகரீகமாக நடத்தப்பட்டமையும் வன்மையாகக் கண்டித்து யாழ் கத்தோலிக்க…
இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிக்கை
இலங்கை நாட்டில் தற்போது நிலவிவரும் அசாதரண நிலைகுறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.