பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு
ஒட்டகப்புலம் வசாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருள்தாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 04 பிள்ளைகள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
தூய கார்மேல் அன்னை ஆலய திருவிழா
தாழையடி செம்பியன்பற்று குடாரப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தூய கார்மேல் அன்னை ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 08ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா…
பெரியகுளம் புனித செபஸ்ரியார் ஆலய திருவிழா
தர்மபுரம் பங்குபங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 10ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழாத் திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பொன்சியன் அவர்களும்…
மந்துவில் திருமுக ஆண்டவர் ஆலய திருவிழா
புதுக்குடியிருப்பு மந்துவில் திருமுக ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி நற்கருனண வழிபாடு நடைபெற்றது. திருவிழா திருப்பலியை…
யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தில் கொல்லப்பட்டவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
இலங்கை அரச விமானப்படையினரால் யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை உணர்வுபூர்வமான முறையில் அங்கு முன்னெடுக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
