அழகியல்கலை பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கரித்தாஸ் வாழ்வோதய நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த அழகியல்கலை பயிற்சிநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. வாழ்வோதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

‘மீட்பின் ஒலி’ தவக்கால திருப்பாடுகளின் ஆற்றுகை

மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுக தொடர்பு அருட்பணி மையத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘மீட்பின் ஒலி’ தவக்கால திருப்பாடுகளின் ஆற்றுகை கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை கலையருவி கலையரங்கில் நடைபெற்றது. கலையருவி இயக்குநர் அருட்தந்தை டக்ளஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 150ற்கும் அதிகமான கலைஞர்களின்பங்குபற்றுதலோடு இவ்வாற்றுகமேடையேற்றப்பட்டது.…

மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலய காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை தியானம்

மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை தியானம் கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பியோ தர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர்…

கூழாமுறிப்பு பங்கு உறுதிப்பூசுதல்

கூழாமுறிப்பு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 82 மாணவர்கள் உறுதிப்பூசுதல்…

நித்திய அர்ப்பண வார்த்தைப்பாடு

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை அருட்சகோதர்களுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு சடங்கு மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்களின் தலைமையில் கடந்த 19ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்றது. கொழும்புத்தறை புனித மசனட் சிற்றாலயத்தில் மாகாண முதல்வர் தலைமையில் நடைபெற்ற…