2023, 24ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கருத்தமர்வு

2023, 24ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப் படிவம் நிரப்புதல் தொடர்பான தெளிவூட்டல் கருத்தமர்வு கடந்த 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின்…

மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த பாசறை நிகழ்வு

வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய மற்றும் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களை இணைந்து முன்னெடுத்த பாசறை நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை எரோனியஸ் மற்றும் அருட்தந்தை டியூக்வின்சன்…

மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களுக்குமான சிறப்பு நிகழ்வு

குளமங்கால் புனித சவேரியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைக்கல்வி வகுப்புகளுக்கு மாணவர்களின் வருகையை அதிகரித்து மாணவர்கள் மறையாசிரியர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின்…

புதிதாக அமைக்கப்பட துணை ஆலயம்

மன்னார் மறைமாவட்டம் மடுவீதி சிந்தாத்திரை அன்னை பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த துணை ஆலயமான புனித அந்தோனியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை நற்கருணைநாதர் சபையை சேர்ந்த அருட்தந்தை மங்களதாஸ் அவர்களின்…

பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 13 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.