குளமங்கால் இளையோரின் கள அனுபவ சுற்றுலா

தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு குளமங்கால் பங்கு இளையோரால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா கடந்த 27,28,29ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர்; கண்டி, நுவரெலியா, பதுளை பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள பிரசித்திபெற்ற…

புனித பிரான்சிஸ் அசிசியார் திருவிழா

யாழ்ப்பாணம் மறைமாவட்ட பொதுநிலை பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ் அசிசியார் திருவிழா 04ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருள்தாசன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

அன்பிய ஊக்குவிப்பாளர்கள், இலகுபடுத்துனர்களுக்கான கருத்தமர்வு

திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய ஊக்குவிப்பாளர்கள் மற்றும் இலகுபடுத்துனர்களுக்கான கருத்தமர்வு 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் திருகோணமலை மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை…

அருட்தந்தை ஆபிரகாம் பர்ணபா அவர்களின் 30ஆவது ஆண்டு குருத்துவ நிறைவு நிகழ்வு

யாழ். மறைமாவட்டம் பண்டத்தரிப்பு பங்கை சேர்ந்தவரும் சிலாபம் மறைமாவட்டத்தில் பணியாற்றுபவருமான அருட்தந்தை ஆபிரகாம் பர்ணபா அவர்கள் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டதன் 30ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு 04ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கட்டார் நாட்டின் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்…

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல திருவிழா

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…