மானிப்பாய் றோ.க.த.க பாடசாலை ஆசிரியர் தினம்
மானிப்பாய் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் வழிபாடும் தொடர்ந்து ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் கலைநிகழ்வுகளும்…
இரணைப்பாலை பற்றிமா அன்னை ஆலய முதல்நன்மை
இரணைப்பாலை பற்றிமா அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 12ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரோ டெனிசியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 20 பிள்ளைகள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
குணமாக்கல் வழிபாடு
மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் உயிர்த்த ஆண்டவர் சமூகம் முன்னெடுத்த குணமாக்கல் வழிபாடு பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 12ஆம் திகதி சனிக்கிழமை இன்று காலை நடைபெற்றது. இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு…
பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும் தொழிற்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த ஆசிரியர், சிறுவர் தின நிகழ்வு
பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும் தொழிற்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த ஆசிரியர் மற்றும் சிறுவர் தின நிகழ்வுகள் கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன. அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு,…
வலைப்பாடு பங்கிற்குட்பட்ட முன்பள்ளிகளில் சிறுவர், ஆசிரியர் தின நிகழ்வுகள்
வலைப்பாடு பங்கிற்குட்பட்ட புனித அன்னம்மாள், புனித அந்தோனியார், புனித சதாசகாய மாதா முன்பள்ளிகளில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுகள் கடந்த 1,7,9ஆம் திகதிகளில் நடைபெற்றன. முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கலைநிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான…