றக்கா விதி புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா
யாழ்ப்பாணம் றக்கா விதியில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழாவும் அதனுடன் இணைந்த ஆலய பொன்விழா நிகழ்வும் பங்குத்தந்தை அருட்தந்தை ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன்…
மாங்குளம் புனித அக்னேசம்மாள் ஆலய வளாகத்திற்குள் புகுந்த யானைகள்
மாங்குளம் நகரப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக திடீரென அதிகரித்து அங்குள்ள மக்களின் பயன்தரு மரங்களை சேதப்படுத்திவருவதாக அப்பிரதேச மக்கள் விசனமடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 09ஆம் திகதி புதன்கிழமை மாங்குளம் புனித அக்னேசம்மாள் ஆலய வளாகத்திற்குள் புகுந்த யானைகள் அங்குள்ள பயன்தரு மரங்களான…
கொழும்புத்துறை புனித வளனார் முதியோர் இல்லம் மக்கள் பாவனைக்காக திறப்பு
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித வளனார் முதியோர் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த மூதாளர் தங்குமிட கட்டடத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இக்கட்டத்தை ஆசீர்வதித்து அதனை முதியோர் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கும் நிகழ்வு கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி…
திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி வாணி விழா
யாழ்ப்பாணம் டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வாணி விழா 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி. மேரி அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வழிபாடும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.…
சூரியவெள்ளி விருது வழங்கும் நிகழ்வு
ஜேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டு 37 ஆண்டுகள் அதன் வளர்ச்சியில் துணைநின்று பணியாற்றியவர்களை கௌரவிக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்ட சூரியவெள்ளி விருது வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை ஜேர்மன் எசன் மாநகரில் நடைபெற்றது. பணியக இயக்குநர்…