பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட 1993ஆம் ஆண்டு உயர்தரப்பிரிவு பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் கடந்த வாரம் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும், மகிழ்வூட்டல நிகழ்வுகளும் இடம்பெற்றன.
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி கசிமீர் சூசைப்பிள்ளை அவர்கள் கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1955ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 69ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரின்…
இலங்கை ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு மலரஞ்சலி
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் சந்தித்து கலந்துரையாடி உயிரிழந்தோரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். கடந்த 09ஆம் திகதி…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கத்தோலிக்க மாணவர் ஒன்றிய பொன்விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தின் பொன்விழா நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லாயன் ஆன்மீகப் பணியகத்தில் நடைபெற்றது. 1974 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி அப்போதைய…
திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூதுப் பிரதிநிதி இலங்கையின் புதிய ஜனாதிபதியை சந்திப்பு
திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூதுப் பிரதிநிதி பேரருட்தந்தை பிரையன் உடக்குவே அவர்கள் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த 09ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் பேரருட்தந்தை பிரையன் உடக்குவே அவர்கள் ஜனாதிபதி…